அடர்வனம் அமைக்கப்பட்டு ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் அவர்கள் பார்வையிட்டு மியாவாக்கி அடர்வனம் குறித்த ஒராண்டு நிறைவு மலரை வெளியிட்டார்.
மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி,
அடையாறு மண்டலத்திறகுட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில்
மரக்கன்று நடப்பட்டு அடர்வனம் அமைக்கப்பட்டு ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி ஆணையாளர்
திரு.கோ.பிரகாஷ் அவர்கள் பார்வையிட்டு மியாவாக்கி அடர்வனம்
குறித்த ஒராண்டு நிறைவு மலரை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணையாளா்
டாக்டா ஆல்பி ஜான் வா்கீஷ், அவர்கள், தலைமை பொறியாளர் (பூங்கா)
திரு.எஸ்.காளிமுத்து, மண்டல அலுவலர் திரு.திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.