திருவள்ளூரில் பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு :
திருவள்ளுர் ஜன 31 : வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையிலான அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று ஆறாம் கட்ட போராட்டம் சட்டப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னய்யாவிடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, தமிழகத்தில் ஆறு கட்டமாக நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்பதாகவும், 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தரும் வரை பாமக ஓயாது.அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய பாமகவினர் தயாராக இருப்பதாகவும் தெரிிவித்தார்.
இதில் மாநில துணை பொது செயலாளர்கள் கே.என்.சேகர்,பாலா என்கிற பாலயோகி,வி.எம்.பிரகாஷ், மாநில துணை அமைப்பு செயலாளர்கள் வெங்கடேசன், அனந்தகிருஷ்ணன் மாநில இளைஞரணி துணை செயலாளர் தினேஷ்குமார்,குரு ஏழுமலை,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு,பசுமை தாயகம் மாநில துணை தலைவர் செல்வகுமார், மாவட்ட செயலாளர்கள் பூபதி, ஞானப்பிரகாசம், பிரகாஷ்,குபேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.