கள்ளக்குறிச்சி பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகள் செயல்பாட்டுக்கு வந்தன..
உளுந்தூர்பேட்டை ஜனவரி – 30,
உலகம் முழுவதும் கொரோனா பரவல் சூழ்நிலையை அடுத்து இந்தியாவிலும் கொரோனாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதற்கு பல தடுப்பு முன்னெச்சரிக்கையை அரசு ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளையும் முன்மாதிரியாக தமிழகத்தில் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கொரோனா காலத்தில் மக்கள் மருத்துவமனைகளை நாடும் போது ஏற்படும் அச்சத்தை போக்கும் பொருட்டும் விரிவான மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழக அரசால் அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டன அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தற்போது அம்மா மினி கிளினிக்குகளை அரசு திறந்து வைத்து வருகிறது இந்நிலையில்
உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில்
திருப்பெயர்,
நெய்வனை,
அதையூர்,
பெரியகுறுக்கை,
கூவாகம்,
பரிக்கல்,
நாச்சியார்பேட்டை ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்கினை உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளரும், திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினருமான இரா.குமரகுரு MLA., அவர்கள் திறந்து வைத்தார்,
நிகழ்ச்சியில் திருநாவலூர் ஒன்றியச் செயலாளர்கள் செண்பக வேல், சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் செல்வி அலுவலர்கள் கவிதா துணை செவிலியர் ரேவதி பாபு சித்ரா காந்திமதி ஆகியோரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் தண்டபாணி அவைத்தலைவர் தணிகாசலம் மேலவை பிரதிநிதி சேகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யாசகம் சக்கரபாணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.