தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.
தமிழக அரசால் போக்குவரத்து துறை மூலம் தமிழகம் முழுவதும் ஜன.18 முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதனையொட்டி பாலக்கோடு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய தருமபுரி கோட்ட பொறியாளர் தனசேகரன் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும், அதே போன்று இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் திருப்பங்களில் முந்தி செல்ல கூடாது, அதிவேகமாக செல்லுதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால்தான் பெருமளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவே போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வலியுறுத்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் ராஜ காந்தன், உதவி பொறியாளர் வெங்கட்ராமன். சாலை ஆய்வாளர் அந்தோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் சாலை பணியாளர்கள்,அலுவலக ஊழியர்கள் சாலை விதிகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர் இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.