குடியரசுரசு தின விழாவை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
குடியரசுரசு தின விழாவை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்
கொடியேற்றிய பின் மதுரை மாநகர, மாவட்ட காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் அன்பழகன் திறந்த ஜீப்பில் சென்று ஏற்று கொண்டார்.
வெண்புறாக்களை பறக்கவிட்டு, தேசிய கொடியின் மூன்று வர்ணங்கள் அடங்கிய பலூன்களை வானில் பறக்க விட்டார்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார். தென் மண்டல காவல்துறை தலைவர் முருகன், டி.ஐ.ஜி.ராஜேந்திரன், மதுரை மாநகர் காவல் துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து காவல்துறையில் வீர சாகசம் புரிந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
149 போலீசாருக்கு தமிழக முதல்வரின் சிறந்த காவலர்களுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன.
263 பேருக்குசிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டன. வருவாய்த்துறை, முன்னாள் படை வீரர் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் துறையை சேர்ந்த 96 பேருக்கு ரூ.21. 20 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தியாகிகள் பாலு,பழ.சுப்ரமணியம், அழகப்பெருமாள் .நாகப்பன், முத்துமணி, பரமசிவம் கட்டச்சாமி
ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது தேசபற்றினை போற்றும் வகையில் பொன்னாடை போற்றி கவுரவித்தார்.