கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பூதலிங்க சாமி திருகோவில் தேரோட்டம்….
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று பூதப்பாண்டியில் அமைந்துள்ள பூதலிங்க சாமி கோவில். காஞ்சியில் நிலமாகவும் திருவானைக்காலில் நீரகவும் திருவண்ணாமலையில் தீயாகவும் காளகஸ்தியில் காற்றாகவும் சிதம்பரத்தில் விண்ணாகவும் சிவபெருமாள் வணங்கப்பட்டு வருகிறார்.இந்த பஞ்சபூதங்களும் ஒன்று சேர வந்து பூதப்பாண்டியில் பூதலிங்க சாமியை வணக்கியதாக கூறப்படுவது கோவிலின் சிறப்பு ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் வருடம் தோறும் தை திருவிழா வெக விமர்சையாக நடைப்பெறும். அதன்படி கடந்த தை மாதம் 6 ம் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பித்தது. திருவிழாவின் 9 ம் நாளன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இதில் சிவகாமி அம்மாள் சம்மேதனமாக பூதலிங்க சாமி திரு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் நான்கு ரதவீதிகள் வழியாக திருதேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றார்கள்.அதன்பின் இரவு சுவாமியும் அம்மாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி வலம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. இதில் குமரி, கேரளா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்த்து ஆயிரக்கணக்கினு பக்தர்கள் பங்கேற்றனர் …