ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா…
தென்காசி மாவட்டம் வடகரையில் அமைந்துள்ள சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா ஆண்டுதோறும் தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கி பங்குனி மாதம் வரை சிறப்பாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தை மாத இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று சைவ வேளாளர் சமுதாய மண்டகப்படி நடைபெற்றது. காலை பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது. மதியம் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை ஆறு மணியளவில் அனுமா நதியிலிருந்து தீர்த்தக்கரகத்தை திருக்கோவில் அர்ச்சகர் சொ.முப்புடாதி பிள்ளை சுமந்து வர மண்டகப்படிதாரர்களான சைவவேளாளர் சமுதாயத்தினர் அக்னி சட்டி மற்றும் மேளதாங்கள் முழங்க ரதவீதிகளில் அழைத்து வந்தனர். நள்ளிரவில் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீர்த்தக்கரக அபிஷேகமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சைவ வேளாளர் சமுதாயத்தினரும் அனைத்து இந்து சமுதாய நலச்சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டானர். கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை சைவ வேளாளர் சமுதாய நிர்வாகிகளான சுந்தரராஜபெருமாள்பிள்ளை, நடராஜபிள்ளை, கருப்பசாமி பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அச்சன்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.