கொரோனா காலத்தில் சாமியார்களுக்கு சேவையாற்றிய சமூகசேவகருக்கு பாராட்டு..
திருவண்ணாமலையில் வசித்து வரும் சமுக சேவகர்
முத்துக் கிருஷ்ணன் கொரோனா காலத்தில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான சாமியார்களுக்கு சோப்பு ,சனிடைசர் ,முக கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கியதுடன் அன்னதானம் மற்றும் நிதி உதவி ஆகிய அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தார்.
தற்போதும் தினமும் 450 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.இவரது சேவையை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கத்தினர் நேற்று திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் நடந்த குடியரசு தினவிழாவில் சமூக சேவகர் முத்துக் கிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் இந்திர ராஜன் ,தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் டாக்டர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.