சென்னை: முகலிவாக்கம் 156 வது வட்ட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ருக்மணி ராம்ஜி மஹாலில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பா.வளர்மதி
சென்னை: முகலிவாக்கம் 156 வது வட்ட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ருக்மணி ராம்ஜி மஹாலில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பா.வளர்மதி B.A.,(சென்னை புறநகர் மாவட்ட மண்டல தேர்தல் பொறுப்பாளர், கழக இலக்கிய அணி செயலாளர், தலைவர் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.) அவர்கள் சிறப்புரையாற்றினார்.மேலும் அவர்கள் கூறுகையில் பொறுப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அ.இ.அ.தி.மு.க.,வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் துணைநின்று வெற்றி வாகை சூட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P. கந்தன் (சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்)., ஆலந்தூர் மேற்குப் பகுதி கழக செயலாளர் நந்தம்பாக்கம் S. ராஜசேகர் DME.,Ex.MC., B. கோவிந்தராஜ் B.A.,Ex.MC ,156வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.