ஒட்டன்சத்திரம் நகராட்சியில் – ரூ 2,89,88,700-க்கு பொது ஏலம் ஆணையாளர் இரா.லட்சுமணன் தலைமையில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம நகராட்சியில் பல்வேறு இனங்களுக்கான பொது ஏலம்
நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு ஒட்டன்சத்திரம் நராட்சி ஆணையாளர் (பொ) இரா.லட்சுமணன் தலைமை
வகித்தார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட மொத்தம் 9-இடங்களுக்கான ( மூன்று
ஆண்டுகாலத்திற்கு அனுபவித்துக்கொள்ளும் உரிமை) நடைபெற்ற ஏலத்தில் ஞாயிற்றுக்கிழமை
கூடும் வாரச்சந்தையில் மாடு, எருமை மற்றும் கன்றுக்குட்டிகளுக்கான சுங்க வசூல் செய்யும் குத்தகை
உரிமை கள்ளிமந்தையம் – ஒத்தையூர்;சேர்ந்த வி.அங்குச்சாமி என்பவர் ரூ.ஒரு கோடியே 71
லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். வியாழக்கிழமை கூடும் வாரச்சந்தையில் ஆடு, கோழி மற்றும்
தோல் ஆகியவற்றிற்கு சுங்க வசூல் செய்யும் குத்தகை உரிமை திண்டுக்கல் பி.சுரேஸ் என்பவர் ரூ
61 லட்சத்து 51 ஆயிரத்திற்கும், ஒட்டன்சத்திரம் காந்தி தினசரி சந்தையில் காய்கறிகளுக்கான
சுங்க வசூல் செய்யும் குத்தகை உரிமை காந்தி தினசரி சந்தை தலைவர் கே.தங்கவேல் ரூ 51 லட்சத்து 18
ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் காந்திமார்கெட்டில் உள்ள கட்டண கழிப்பறையில்
கட்டணம் வசூலிக்கும் குத்தகை உரிமை ஒட்டன்சத்திரம் வி.தனராஜ் என்பவர் ரூ 1,லட்சத்து 66
ஆயிரத்துக்கும் பேரூந்து நிலையத்தில் தட்டுமூலம் முறுக்கு விற்பனை செய்யும் குத்தகை உரிமை
ஒட்டன்சத்திரம் து.முருகேசன் என்பவர் ரூ 3 லட்சத்து 100க்கும் ஒட்டன்சத்திரம் பேருந்து தட்டு மூலம்
இஞ்சி மிட்டாய் விற்பனை செய்யும் குத்தகை உரிமை ஒட்டன்சத்திரம் வி.தனராஜ் ரூ 51 ஆயிரத்தி
500 க்கும், பேருந்து நிலையத்தில் தட்டு மூலம் பழங்கள் விற்பனை செய்யும் குத்தகை உரிமை
விருப்பாச்சி என்.பி.கே.சூரிய பிரபாகரன் ரூ 1 லட்சத்து 2 ஆயிரத்து 100க்கும் ஏலம்
எடுக்கப்பட்டது ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான (சி கிரேடு) பேருந்து நிலையத்தினுள்;
வரும் பேருந்துகளுக்கு கட்டணம் வசூல் செய்ய உரிமை மற்றும் திண்டுக்கல் – பழனி (தேசிய
நெடுஞ்சாலையில்) உள்ள புளிய மரங்களின் மேல் மகசூல் பலன் குத்தகை உரிமை ஆகிய இரண்டும்
ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் ரூ 2 கோடியே 89 லட்சத்து 88 ஆயிரத்து 700-க்கு ஏலம் போனது.