அனைத்துத்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ வேலை நாடுநர்கள்‌ பதிவு செய்வதற்கான வழிமுறைகள்‌ குறித்த விழிப்புணர்வு…

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌
திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌,
கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.எம்‌.எஸ்‌ மஹாலில்‌
ஈரோடு மாவட்ட நிர்வாகம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறிவழிகாட்டும்‌ மையம்‌
இணைந்து கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமுத்து மஹாலில்‌
06.02.2021 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ள மாபெரும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு
முகாம்‌ தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி
மன்றத்தலைவர்களுக்கான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ வேலை நாடுநர்கள்‌ பதிவு
செய்வதற்கான வழிமுறைகள்‌ குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்‌.
உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌
திருமதி.ச.கவிதா, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.பி.தங்கதுரை,
கோவை மண்டல இணை இயக்குநர்‌ (வேலைவாய்ப்பு) திருமதி. ஆ.லதா
உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply