மண்பாண்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மலர்கொடி வேலு கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு பாராட்டு விழா.

Loading

மண்பாண்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மலர்கொடி வேலு கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு பாராட்டு விழா.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தேவகி நாராயணசாமி உடையார் திருமண மண்டபத்தில் மலர்க்கொடி வேலு கல்வி அறக்கட்டளை சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 2018-2019 மற்றும் 2019 -2020 ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் முதல் 4 இடங்களைப் பிடித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதல் 4 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 2000 வரை பரிசளிப்பும் வழங்கப்பட்டன.

பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 4000 முதல் 2000 வரை பரிசளிப்பும் வழங்கப்பட்டன.

மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 30 பேருக்கு ஊக்கத்தொகையாக தலா ஆயிரம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மல்லிகா, மலர்க்கொடி வேலு கல்வி அறக்கட்டளை தலைவர் என். வஜ்ஜிரவேலு , அறக்கட்டளை இயக்குனர் புகழேந்தி மற்றும் மேகநாதன் செயலாளர் ஈஸ்வரப்பன் வாழ்த்துரை வழங்கினர். மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோரின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றன.

மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி ஹரிகிருஷ்ணன், நாகராஜ், பன்னீர்செல்வம், கலைச்செல்வி, பிரகாசம், சுந்தர், சுப்பிரமணி, ரவி, சியாமளாமுருகேசன் வாழ்த்துரை வழங்கினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *