இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்ம அவர்களின்‌ 73-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன்‌ கொண்டாடுவது சம்பந்தமாக, ௬ழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவையின்‌ மவட்டச்‌ செயலாளர்கள்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌.

Loading

இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்ம அவர்களின்‌
73-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன்‌ கொண்டாடுவது சம்பந்தமாக,
௬ழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவையின்‌
மவட்டச்‌ செயலாளர்கள்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ வளர்ச்சிக்காகவும்‌,
தமிழக மக்களின்‌ நலனுக்காகவும்‌, தன்னையே அர்ப்பணித்து தவவாழ்வு வாழ்ந்து,
மக்கள்‌” அனைவரது இதயங்களிலும்‌ நிரந்தரமாக வீற்றிருக்கும்‌ மாண்புமிகு
புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ 73-ஆவது பிறந்த நாளை, கழக புரட்சித்‌ தலைவி
அம்மா பேரவையின்‌ சார்பில்‌ எழுச்சியுடன்‌ கொண்டாடுவது சம்பந்தமாக,
கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவையின்‌ மாவட்டச்‌ செயலாளர்கள்‌ ஆலோசனைக்‌
கூட்டம்‌ தலைமைக்‌ கழகத்தில்‌ கழக
புரட்சித்‌ தலைவி அம்மா பேரவைச்‌ செயலாளரும்‌, மதுரை புறநகர்‌ மேற்கு மாவட்டக்‌ கழகச்‌
செயலாளரும்‌, மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌ தகவல்‌
தொழில்நுட்பவியல்‌ துறை அமைச்சருமான திரு. .8. உதயகுமார்‌ அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌
கழக ஒருங்கிணைப்பாளர்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சர்‌
திரு. ஓ. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ கலந்துகொண்டு, மாண்புமிகு புரட்சித்‌ தலைவி
அம்மா அவர்களின்‌ பிறந்த நாளை ஏழை, எளியோர்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிறப்பாகக்‌
கொண்டாடுவது சம்பந்தமாகவும்‌, விரைவில்‌ நடைபெற உள்ள சட்டமன்றப்‌ பொதுத்‌
தேர்தலில்‌, கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள்‌ துடிப்புடன்‌ களப்பணி
ஆற்றுவது குறித்தும்‌ ஆலோசனை வழங்கினார்‌.

இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌, தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌,
கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவையின்‌ மாநில துணை நிர்வாகிகள்‌ உள்ளிட்டோர்‌
கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்‌.
இக்கூட்டத்தில்‌ கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவையின்‌ மாவட்டச்‌
செயலாளர்களும்‌, மாவட்ட நிர்வாகிகளும்‌ கலந்துகொண்டனர்‌.
இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மச பேரவையின்‌ சார்பில்‌ தலைமைக்‌
கழகத்தில்‌ இன்று நடைபெற்ற ஆலோசனைக்‌ கூட்டத்தை முன்னிட்டு, தலைமைக்‌ கழக
நுழைவு வாயிலில்‌ முகப்பு அமைக்கப்பட்டு, செண்டை மேளம்‌ முழங்க, சாலைகளின்‌
இரு மருங்கிலும்‌ கழகக்‌ கொடித்‌ தோரணங்களும்‌, குருத்தோலைகளும்‌ அழகுற
அமைக்கப்பட்டு, விழாக்‌ கோலம்‌ பூண்டிருந்தது.
இந்த ஆலோசனைக்‌ கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும்‌,
கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவைச்‌ செயலாளரும்‌, மதுரை புறநகர்‌ மேற்கு மாவட்டக்‌
கழகச்‌ செயலாளரும்‌, மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌
தகவல்‌ தொழில்நுட்பவியல்‌ துறை அமைச்சருமான திரு. R.B. உதயகுமார்‌ அவர்கள்‌
செய்திருந்தார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *