சத்திரப்பட்டியில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு பழனி திருக்கோவில் சார்பில் ஒளிரும் பட்டைகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், வட்டம், சத்திரப்பட்டியில் பழனி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் சார்பாக இரவு நேரங்களில் எவ்வாறு பாதுகாப்பான நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்களுக்கு இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் இருக்க சத்திரப்பட்டி காவல்துறையினர் மற்றும் பழனி முருகன் திருக்கோவில் சார்பாக பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கப்பட்டு இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தக்கார் கிராந்தி குமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், பழனி திருக்கோவில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர், கருப்பணன், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவா, மற்றும் சத்திரப்பட்டி காவல்துறை ஆய்வாளர் முருகேஸ்வரி,சார்ஆய்வாளர், ஆகியோர், கலந்துகொண்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு இரவு நேரங்களில் எவ்வாறு பாதுகாப்பான நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கி ஒளிரும் பட்டை வழங்கினர்.
ஒட்டன்சத்திரம் செய்தியாளர் ப.உதயன்