நகர பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடையை அகற்ற கோரி இரண்டாம் கட்டமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர்கள் சிற்பி செந்தில் பட்டாணி மணி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிறுவனர் வேல்முருகன் ஆணைப்படி பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் இயங்கும் மதுபான கடை மற்றும் பண்ருட்டி நகர பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடையை அகற்ற கோரி இரண்டாம் கட்டமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர்கள் சிற்பி செந்தில் பட்டாணி மணி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நகர தலைவர்கள் கோ.ராஜா, ஜெகன் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் இரா.சுரேந்தர் கண்டன உரையாற்றினார்.
இறுதி கட்டமாக கடையை அகற்ற கோரி திடீரென்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சங்கரன் போராட்டத்தில் ஈடுப்பட்ட கட்சி நிர்வாகிகளை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாசில்தார் தலைமையில் இன்று அமைதி பேச்சு வார்த்தை நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர் இதனால் கூட்டம் கலைந்து சென்றனர். இதில் மற்றும் இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், தேவராசு, ராஜகோபால் ராஜீ .பகண்டை மணி மாவட்ட நிர்வாகிகள் பலராமன், விஜி. ஸ்டிக்கர் மோகன், இராமு, சிவா நகர நிர்வாகிகள் குமார், டேவிட், வெங்கட், சுரேஷ் வெங்கடேசன், மதன்கான்’ உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.