வேலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முற்றிலும் தடுக்க வேண்டிய விழிப்புணர்வு.
வேலூர் மாவட்டம், வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், ஆகியோர்களுக்கு குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு (V.V.P.O) கூட்டத்தில், வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.காமினி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், அவர்கள் கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரிகள் மற்றும் அந்த கிராம முக்கியஸ்தர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். இதில் 600க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.