ரூ,1,10, கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கோவிட்-19.மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ், (CorporateSocialResponsibilityScheme), ரூ,1,10,கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது,
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் 1,10.கோடி செலவில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி தானியங்கி நுண்ணுயிர் கண்டறிதல் உபகரணம், முழு தானியங்கி நோய் எதிர்ப்பு தடுப்பு உபகரணம், முழு தானியங்கி உறைநிலை பகுப்பாய்வு உபகரணம், கோவிட்-19 தடுப்பு நெறிமுறை உபகரணங்கள், கோவிட்-19 ஆர், டி ,பி, சி ,ஆர், பரிசோதனை முடிவுகள் கருவிகளின் வடிவமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு, ஈ,சி, ஜி, இயந்திரம், சிறிய எக்ஸ்ரே இயந்திரம், ஜெனரேட்டர் (Cardiotcography,(CTG),Diathermy.Defibrillatorஆகிய மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது,