காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார்- பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்த நாள் : காப்பகத்தில் கேக் வேட்டி – உணவு வழங்கி கொண்டாட்டம் …! தம்மம்பட்டி எம்.ஸ்ரீபதி ஏற்பாடு …!
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார் மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி சென்னை சாந்தோம் அருகே உள்ள முதியவர் காப்பகத்தில் மதிய உணவு வழங்கி, கேக் வேட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு,சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தம்மம்பட்டி எம்.ஸ்ரீபதி தலைமை தாங்கினார்.
மாநிலத் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். மேலும்,
அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.செல்லக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் எல்லா வளமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில், காங்கிரஸ் உறுப்பினர்கள் கந்தசாமி, கிருஷ்ணாபுரம் சுதாகர், செல்லப்பன் மற்றும் அட்வகேட் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.