திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்த “மினி மாரத்தான்” ஓட்டப்பந்தயம் :
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தவும், உடல், மன வலிமையை வளர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக காவல் துறை துணை தலைவர் பி.சாமூண்டீஸ்வரி ஆலோசனைப்படி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.அரவிந்தன் மேற்பார்வையில் “மினி மாரத்தான்” ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.போட்டியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் பொதுமக்கள் சார்பில் 31 ஆண்கள், 55 கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காவல்துறை சார்பில் 41 ஆண் காவலர்கள் 12 பெண்; காவலர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டி திருப்பாச்சூர் பைபாஸ், ஐ.சி.எம்.ஆர் டோல்கேட் வழியாக திருவள்ளூர் நகரத்தில் 5 கி.மீ. தூரம் கடந்து, மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே முடிவந்தடைந்தது.
இறுதியாக முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியே கோப்பைகளும் மற்றும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.அரவிந்தன் வழங்கி பாராட்டினார்.