புரட்சி பாரதம் கட்சியின் புரட்சி பயணம். இசை வெளியீட்டு விழா.
புரட்சி பாரதம் கட்சியின் கொள்கைகள் அடங்கிய இசை வெளியீட்டு விழா மற்றும் மேற்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் 7 ந் தேதி A A மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் D .ருசேந்திரகுமார் மாநில செயலாளர் , பரணி P.மாரி, மாநிலச் செயலர், வளசை எம். தர்மன், இளைஞர் அணி பொதுச் செயலாளர் , கூடப்பாக்கம் E. குட்டி, மாநிலச் செயலர் C.L எட்மன் மாநில இளைஞரணி செயலாளர் Y.ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் G. பெரமையன், மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர். மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது,
கலந்தாய்வு கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் புரட்சி பயணம் இசைத் தட்டை( சி டி) வடிவமைத்த இசை அமைப்பாளர் கிருஷ்ணா, பாடலாசிரியர்கள் பரணிபுத்தூர் D.சிவா, V.விஜயகுமார் , R.பாபு ஒருங்கிணைப்பாளர் CS.ராமராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி யார் இசைத்தட்டை வெளியிட்டார்.
ஈரோடு பொறுப்பாளர்கள் சாமிநாதன் ,ரவிச்சந்திரன், ஸ்ரீரங்கம் ,விஸ்வேஸ்வரன், ராஜன் ,புவனேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நன்றியுரை பிரபு நிகழ்த்தினார்.