கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் ஜோதி தெருவில் பல மாதங்களாக குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர். சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம்…..
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் 11வது ஜோதி குறுக்கு தெரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தெரு முழுவதும் சாக்கடை தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனை சீர் செய்ய வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் உட்பட பலரிடம் நேரடியாக மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மழை நேரத்தில் சாக்கடை தண்ணீர் அதிகமாகி இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது எனவும், அதேபோல சாக்கடையில் உள்ள புழுக்கள் வீடு முழுவதும் ஊர்ந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாவாகவும் இப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு பலவித நோய் பரவுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றார். பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களை சந்தித்து மனுக்கள் அளிக்கப்பட்டும் கட்சி சார்ந்தவர்கள் இந்த இடத்தை வந்து பார்வையிட்டு விட்டு மட்டுமே செல்கின்றனர். ஆனால் யாருமே இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகளுக்காக வந்து செல்லும் சுகாதார துறையை சேர்ந்தவர்களும் இவ்வழியாக தான் வந்து செல்கிற்றனர் இருந்த போதும் சுகாதார துறை மூலமாகவோ, மாவட்ட மாநகராட்சியோ மற்றும் மாவட்ட நிர்வாகமோ இந்த சாக்கடை உடைப்பை கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர் கருத்தாகும்..