கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, உள்ளிட்ட 5 இடங்களில் கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை. டாக்டர் ஜெயசேகரன் தனியார் மருத்துவமணையில் கொரோனா ஓத்திகை நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி அத்ற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் ஒரு சாவாலாகவே இருந்து வந்தது. ஒன்பது மாதத்திற்கு பின்னர் முதற்கட்டமாக கொரோன நோய் தொற்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபட்டு அதன் சோதனை முயற்சியாக அதன் ஒத்திகை இந்தியாவில் இரண்டாவது கட்டமாகவும் தமிழகத்தல் முதற்கட்டமாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பத்பநாபாபுரம் அரசு தலைமை, செண்பகராமன் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் டாக்டர். ஜெயசேகரன் தனியார் மருத்துவமனை என 5 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. போதுமான காற்றோட்டதுடன் கூடிய இட வசதி, இணைய இணைப்பு, மின்சாரம் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகையில் ஈடுபடும் அனைவருக்கும் தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையானா டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையில் முதல் முதலாக கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்…