ஆவின் நிர்வாகம் விவசாயிகள் கொண்டு வரும் பாலை முழுமையாக கொள்முதல் செய்திட வேண்டும் நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு டெல்லியில் போராடி வரும் விவசாய பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என கூட்டியக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன் பேட்டி.தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்டு நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை களுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் .ஆவின் நிர்வாகம் விவசாயிகள் கொண்டு வரும் பாலை முழுவதும் கொள்முதல் செய்திட வேண்டும்
புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாநில தலைவர் காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.