திருவள்ளூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி தெருக்கூத்து கலை நிகழ்ச்சியோடு சென்று ஆணையரிடம் மனு :
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையிலான அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஐந்தாம் கட்ட போராட்டமாக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாலர் பாலா என்கிற பாலயோகி தலைமையில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடுகோரி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்று திருவள்ளூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தெருக்கூத்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடும், மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலா என்கிற பாலயோகி டிராக்டரை ஓட்டிவந்தும் நகராட்சி ஆணையர் சந்தானத்திடம் மனுவை அளித்தனர்.
இதில் மாநில இளைஞரணி செயலாளரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான தினேஷ்குமார், யோகானந்தம்,விஜயகாந்த்,நகர செயலாளர் கண்ணன்,பாலசர்வேஷ்,ஒன்றிய செயலாளர் விஜயராகவன்,கேசவன், வழக்கறிஞர் கேசவன், குமார்,தாஸ்,வாசுதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
===============================================================================