7 உட்பிரிவுகளை கொண்ட சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொது பெயரில் அழைப்பதற்கான அரசாணை , அம்பேத்கர் மக்கள் இயக்கம் வரவேற்பு…
7 உட்பிரிவுகளை கொண்ட சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொது பெயரில் அழைப்பதற்கான அரசாணை , அம்பேத்கர் மக்கள் இயக்கம் வரவேற்பு
இது குறித்து அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுவாக அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு சாதி சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.. அதேபோல, பட்டியலின மக்கள் தங்களின் சலுகைகளை முழுசுமாக பெறுவதற்கும் சாதி சான்றிதழ் தேவைபடுகிறது.அந்த வகையில் பள்ளர் சமுதாயம் பட்டியலினத்துக்குள்தான் வருகிறது.அதனால், பள்ளர் சமுதாய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வந்தனர். அதேபோல, குடும்பர், பள்ளர், மூப்பர், போன்ற உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரில் மாற்றுமாறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், 7 உட்பிரிவுகளை கொண்ட சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொது பெயரில் அழைப்பதற்கான அரசாணை இன்னும் 30 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை அம்பேத்கர் மக்கள் இயக்கம் வரவேற்று முதல்வருக்கும் , தமிழக அரசுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.இந்த அறிவிப்பின்மூலம்,தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயர் கேட்கும் உட்பிரிவு மக்களுக்கு, சாதி சான்றிதழ் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும் என்றும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இளமுருகு முத்து கூறியுள்ளார்.