18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக நேர்காணல் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில,; 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவினர்கள் முன்னிலையில்; மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.
இக்குழு மாவட்ட ஆட்சித்தலைவரை தலைமையாக கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், ஆய்வு மருத்துவர்கள் மற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் ஆகியோர் உறுப்பினராக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மனுதாரர்களை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள, 18 வயதிற்குட்பட்ட ஊனமுற்றவர்களுக்கு இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற நேர்காணலில் மாவட்டத்தில்; பல்வேறு பகுதிகளில் இருந்து 75 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்காணல் நடத்தினார். இவர்களின் தகுதிக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விரைவில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளி நலத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அருண் சத்தியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) திரு.பரிமளம்;, வட்டாட்சியர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்), மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
————————————————————————————————————
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர்.