வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி சிதம்பரத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து மனு கொடுக்கும் போராட்டம். மாநிலத்தலைவர் பு.த. அருள்மொழி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி ஆணையாளர்களை சந்தித்து மனு கொடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டத்தை அவர்கள் அறிவித்திருந்தனர்.இதனையொட்டி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநில வன்னியர் சங்கதலைவர் பு.த.அருள்மொழி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு நான்கு வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நான்கு வீதிகளை ஊர்வலம் வந்தனார்தலைமை பு.தா அருள்மொழி மாநில வன்னியர் சங்கத் தலைவர் முன்னிலை அசோக்குமார் மாநில துணை பொதுச்செயலாளர் சசி குமார் பாண்டியன் மாவட்ட செயலாளர் வி எம் எஸ் சௌந்தரராஜன் மாநிலத் துணைத் தலைவர் தேவதாஸ் பழைய ஆண்டவர் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் வீரமணி பாட்டாளித் தொழிற்சங்கம் சஞ்சீவி மாநில செயற்குழு உறுப்பினர் அழகரசன் பசுமைத்தாயகம் முன்னாள் மாவட்ட செயலாளர் கலையரசன் செல்வ மகேஷ் மற்றும் சிதம்பரம் நகர செயலாளர்கள் வழக்கறிஞர் ராஜவேலு பொறியாளர் தில்லைதில்லிப் ராஜன் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் சமூக நீதிப் பேரவை செவ்வாய் மகளிரணி அருள் கோவிந்தன் மாநில அமைப்பாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஒன்றிய நகர பேரூர் ஊடகப்பிரிவு கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்