பாலக்கோடு அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இப்பகுதியில் 1500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்த பட்டிருந்தது தற்போது குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது குடிநீரை பயன்படுத்திய பொதுமக்கள் சில மணி நேரத்திலேயே தலைசுற்றல் , வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்பட்டதால் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மங்கம்மாள் (75) பழனியம்மாள் (45) முனியம்மாள் (90) தாசின் (3) முத்துமணி (55) சித்ரா (35) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.