கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமான அளவில் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளன.இந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பகுதிகளில் பல்வேறு உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் S.ரமேஷ் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.R ஷெல்லி முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் பல்வேறு உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்ல எனவே, சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் நாஞ்சில், B.ராஜ்குமார் ,ஸ்டாலின் ,பெஞ்சமின் ஜெயராஜ் மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணிதாசன் மாவட்ட செய்தி தொடர்பாளர் M. சஜித் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் சுப்பிரமணியன் நாகர்கோவில் தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் ஜஹாங்கீர் நாகர்கோவில் தொகுதி செயலாளர் முத்துராஜ் குளச்சல் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பனிமயம் குளச்சல் தொகுதி செயலாளர் ஆரோக்கியம்
நாகர் கோவில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மணி பட்டேல் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.