திருவண்ணாமலையில் மக்கள் முன்னேற்றக்கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பொங்கலுக்கு ரூ.2,500 வழங்குவதாக வாக்குறுதி,,,,,,,,
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மக்கள் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இதில் மக்கள் முன்னேற்றக் கட்சி பொதுச் செயலாளர் டி. துரைசாமி ,வடக்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேல் ,வடக்கு மாவட்ட தலைவர் உதயகுமார், மகளிர் அணிச் செயலாளர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில் மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தங்கராஜிம்,திருவண்ணாமலை தொகுதியில் செந்தில்குமரனும், கலசபாக்கத்தில் ஜோசப் ராம்கியும், போளூரில் சரவணனும் ,வந்தவாசியில் உதயகுமாரும் ,செய்யாறில் செந்தில்நாதனும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது .
மேலும் ஆரணி தொகுதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
மக்கள் முன்னேற்றக் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு ரூ 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், சுய உதவி குழுக்களுக்கு சலுகையுடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் ,தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.