தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற பதிவு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :
சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25,000 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 பெற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நலத்துறை பணியாளர்களிடம் ஆவணங்களை அளித்து இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
சேமிப்பு பத்திரம் பெறுவதற்கு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள நிலையில் பிறந்த 3 வயதிற்குள் பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்த பிறகு, இரண்டாவது பெண் குழந்தை பிறந்த 3 வயதிற்குள் பதிவு செய்ய வேண்டும். குழந்தைகளின் தாய்க்கு 35 வயதிற்குள் குடும்ப அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். (மருத்துவ சான்று இணைக்கப்பட வேண்டும்). ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திருவள்ளுர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக வசித்தவராக இருத்தல் வேண்டும் (பிறப்பிட சான்று). குழந்தைகளின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்று (மாற்று சான்றிதழ்),குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம், திருமணபத்திரிகை, ஜாதி சான்று,ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று,குழந்தைகளின் பிறப்பு சான்று ஆகிய ஆவணங்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நலத்துறை பணியாளர்களிடம் அளித்து இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
=================================================================