கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்கள் கீழ்க்கண்டவாறு…

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்கள் கீழ்க்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கின்றார்:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் முககவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை மொத்தம் 17,809 நபர்களுக்கு அபராதமாக ரூபாய் 29,30,300 வசூலிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 3,30,612 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமைகளில் 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 15,578 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6344 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தற்போது கொரோனா பரவல் நமது மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் திருவிழா காலங்களாக தொடர்ந்து வருவதாலும் பொதுமக்கள் கூடுமானவரை பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கோ கடைகளுக்கோ வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைபிடிப்பதோடு முகக்கவசம் அணிவதையும், கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *