சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
சேலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் சுற்றுசூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் எனவே சுற்றுசூழல் எந்த வகையிலும் கெட்டுப்போக கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
தமிழகத்தில் சுற்றுசூழலை காக்க 7 அம்ச திட்டம் மக்கள் நீதி மய்யம். அறிக்கை தயார் செய்துள்ளது. இதில் சுற்றுசூழலுக்கு ஏதுவான தொழில் வளர்ச்சியை உருவாக்கி ஊக்குவித்தல்,நெகிழிலை மறுசுழற்சி முறை- குடிசைத் தொழிலாக மாற்றுதல்,நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கைகள்.ஏரி கண்மாய்களை மாசுபடுத்துபவர்களை தண்டித்தல், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பசுமை தொழில்களை செயல்படுத்த ஊக்குவித்தல், உள்ளூர் மக்கள் அடங்கிய சுற்றுச்சூழல் குழுக்கள் துவக்கப்பட்டு பெருமளவு மாசுபடுத்தும் இடங்கள் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தல் மற்றும் உயிர்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதும்க்களுக்கு எடுத்துரைக்க தனிப்பிரிவு இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. எனவே
நல்லதிட்டங்களை
நடிகனாக இருந்து சொல்லும் போது கேட்கவில்லை என்பதால் தலைவனாக மாறி சொல்கிறேன்
மேலும் அரசின் குடிமராமத்து என்பது கமிஷனுக்கானது ; எங்களின் சுற்றுசூழல் பாதுகாப்பு என்பது ஒரு மிஷன் என்றும் எட்டு வழிச்சாலை குறித்து கேள்விக்கு,சாலை வேண்டும்; வளர்ச்சி வேண்டும் என்பது தேவை அதற்காக மக்களை வஞ்சிக்காக கூடாது என்றார்.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது அரசுக்கு செலவு மக்களுக்கு லாபம்.இதனால் எந்த மாற்றமும் நிகழாது என்றும் கூறினார்.