சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழக பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகளை நவீனப்படுத்தும் பணி நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படுகிறது.இதில் ஆசிரியரின் பெயர், ரத்த வகை, முகவரி, பள்ளியின் பெயர், பணியிட விவரங்கள் அடங்கியுள்ளன. புதிய அடையாள அட்டைகளை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.இந்த ஸ்மார்ட் கார்டு ஆசிரியர்களுக்கு பல இடங்களில் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.