வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 பிறந்தநாளை முன்னிட்டு 262 பெண்களுக்கு இலவச சேலை வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.
தேனி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 பிறந்தநாளை முன்னிட்டு போடி வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மேலும் சடையால் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சடையால் பட்டியை சேர்ந்த பெண்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை வரவேற்றனர்.அதன்பின் 262 பெண்களுக்கு இலவச சேலை வழங்கி வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை கிராம மக்களுடன் துணை முதல்வர் கொண்டாடினார்.அதன்பின் அங்கு உள்ள சமுதாயக் கூடத்தை திறக்க சென்ற துணை முதல்வர் அந்த ஊரைச் சேர்ந்த காமத்தாய் என்ற 96 வயது மூதாட்டியிடம் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச் செய்தார்.மூதாட்டியின் வயதுக்கு மரியாதை கொடுத்து அவரை சமுதாய கூடத்தை திறந்து வைக்கச் செய்த துணை முதல்வர் அவர்களை கிராம மக்கள் கைதட்டி பாராட்டினர்.மேலும் போடி துரைராஜபுரம் காலணியில் அதிமுக மீனாட்சிபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் திருப்பதி தலைமையில் திமுக மற்றும் மாற்று கட்சியினர் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் இணைந்தார்கள்.