நகர்கோவில் மாநகர சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பொதுமக்கள் பலரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
நகர்கோவில் மாநகர சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பொதுமக்கள் பலரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட என் நாகர்கோவில் 2020 என்ற போட்டியிலும் பலரும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்து தெரிவித்திருந்தார்கள்.
அதன்படி மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் ஏதுவான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புத்தாண்டில் புது துவக்கமாக நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் விருட்சம் அறக்கட்டளை இணைந்து அவ்வை சண்முகம் சாலையில் செம்மாங்குளம் கரையின் அருகில் மரக்கன்றுகள் நடுவதை மாநகரட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் அவர்கள் துவங்கி வைத்தார். மேலும் வரும் நாட்களில் நாகர்கோவில் மாநகர் முழுவதும் சாலையோரங்களில் ஏதுவான இடங்களில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பொதுமக்கள் அல்லது தன்னார்வ அமைப்புகள்
இணைந்து செயல்பட விருப்பம் இருப்பின் தங்களின் விபரங்களை மாநகராட்சி Whatsapp : 9487038984