தேனிபெரியாறுமின்நிலையம்,வைகை சிறுபுனல்ஆய்வு
![]()
தேனி மாவட்டம்
மின்பகிர்மான வட்ட மத்திய பண்டக சாலை, பெரியாறு மின் நிலையம் மற்றும் பெரியாறு-வைகை சிறு புனல் நிலையம் ஆகிய மின் உற்பத்தி நிலையங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், மின்பகிர்மான வட்டம், மத்திய பண்டக சாலை, பெரியாறு மின் நிலையம் மற்றும் பெரியாறு-வைகை சிறு புனல் நிலையம் ஆகிய மின் உற்பத்தி நிலையங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் (07.11.2025)அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி மின்பகிர்மான வட்டம், மத்திய பண்டக சாலையில் மின் கம்பம், மின்மாற்றி, மின்கடத்தி உள்ளிட்ட தளவாட பொருட்கள் இருப்பு நிலை குறித்தும் மற்றும் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின் தொடரமைப்புக் கழகம், மின் பகிர்மான கழகம், மின் உற்பத்திக் கழகத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகம் நடவடிக்கைகள் குறித்து மின்சார பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள பெரியாறு-வைகை சிறு புனல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் மக்கள் தொகை, குடியிருப்புக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தடையின்றி மின்சாரம் வழங்கவது குறித்தும், மின் நுகர்வோர் சிரமங்களை குறைக்கவும், தொடர் மின் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, “அன்புக்கரங்கள்” என்ற திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அன்புக்கரங்கள் திட்டம் துவங்கப்பட்டதற்கான நோக்கம் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
மேலும், அம்மாணவர்களின் எதிர்கால குறிக்கோள் குறித்து கேட்டறிந்து மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமதி சொ.லெட்சுமி, செயற்பொறியாளர் (பொ) (புனல் மின்நிலையம்) திரு.கோபாலகிருஷ்ணன், மின்சாரவாரிய மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி வே.விஜயா, முதன்மை கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

