மக்கள் தொடர்பு  திட்ட  முகாமில் க.தர்ப்பகராஜ்

Loading

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  புளியரம்பாக்கத்தில்  நடைபெற்ற  மக்கள் தொடர்பு  திட்ட  முகாமில்  கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் இஆப., அவர்கள் இன்று (29.10.2025)அன்று செய்யார் வட்டம், புளியரம்பாக்கம் எம் டி ஜே திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில்  கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசின் சார்பில் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் கிராமப்புறங்களை சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் மாதந்தோறும் மக்கள் தொடர்பு  முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் செய்யார் வட்டம் புளியரம்பாக்கம் எம் டி ஜே திருமண மண்டபத்தில் பெருங்களத்தூர், வேளியநல்லூர், சிறுவேளியநல்லூர், வடங்கம்பட்டு, தும்பை, வடஎலப்பாக்கம், பல்லி, மங்கலம் மற்றும் காழியூர் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில்  மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களும் திட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும்  அரசு திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சியும், மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி மக்கள் தொடர்பு திட்ட முகாமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம் அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதாகும். அதன்படி தற்போழுது புளியரம்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது . மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது . ஆரோக்கியமாக சமுதாயத்தை உருவாக்குவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில்  நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் இன்றைக்கு இந்த மக்கள் தொடர்பு முகாமில் 511 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 379 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மேலும் 132 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.  இம்முகாமில் தற்போழுது பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு மொத்தம் ஒரு கோடியே 84 இலட்சத்து 25 ஆயிரத்து எட்நூற்று ஐம்பத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது,   அரசு துறை சார்ந்த நல திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்ற இந்த மக்கள் தொடர்பு முகாமை பொதுமக்கள்  நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்வில்  முன்னேற்றம் காண வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பாக 286  வீட்டுமனை பட்டாகள் ரூபாய் ஒரு கோடியே 71  இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும், 65 புதிய குடும்ப அட்டைகள் ரூபாய் 7 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலும்,  பட்டா மாற்றம் 39 நபர்களுக்கும், உப்பிரிவு பட்டா மாற்றம் 16 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை 16 நபர்களுக்கும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக இரண்டு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்பு நிதிக்கான ஆணைகளை 5 நபர்களுக்கும், வேளாண்மைத்துறை சார்பாக உளுந்து சிறு தொகுப்புகள்  2 நபர்களுக்கு ரூ.3600 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பாக தெளிப்பு நீர் பாசனம், காய் கறி விதை தொகுப்புகள் மற்றும் இடு பொருள்களை 8 நபர்களுக்கு 2 இலட்சத்து 32 ஆயிரத்து இரநூற்று ஐம்பத்தி எட்டு  ரூபாய் மதிப்பீட்லும் நலத்திட்டங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும்  ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்  வழங்கினார்கள்.

இம்முகாமில் செய்யார் சார் ஆட்சியர் செல்வி.அம்பிகா எல் ஜெயின், இஆப,  செய்யார் வட்டாட்சியர் திரு. அசோக் குமார்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

0Shares